போதைப்பொருட்கள் பற்றி குறிப்பிடுவது ஏன்? - டைரக்டர் லோகேஷ் கனகராஜ்

போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து வருகிறேன் என்கிறார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.
போதைப்பொருட்கள் பற்றி குறிப்பிடுவது ஏன்? - டைரக்டர் லோகேஷ் கனகராஜ்
Published on

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற வித்தியாசமான படங்களை எடுத்து வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது அடுத்த படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். விரைவில் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

பொதுவாகவே தனது படங்களில் போதைப்பொருட்கள் பற்றி குறிப்பிடுவதை லோகேஷ் கனகராஜ் வழக்கமாக வைத்திருக்கிறார். அது ஏன்? என்பது குறித்து அவர் கூறியதாவது?

"தற்போது போதைப்பொருட்களின் பயன்பாட்டை அதிகமாகவே பார்க்க முடிகிறது. இதை முற்றிலுமாக தடுக்கத்தான் எல்லோரும் முயற்சி செய்கிறோம். என்னுடைய படத்தில் போதைப்பொருட்கள் குறித்து கூறுவதின் காரணமும் இதுதான்.

போதைப்பொருட்களுக்கு எதிரான செயல்பாட்டில் பெரிய நட்சத்திரங்கள் நடிப்பதன் மூலம் அவர்களது ரசிகர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும். நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும் என்பதுதான் என் நம்பிக்கை. அதற்காகத்தான் என் படங்களில் போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து வருகிறேன்".

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com