''கூலி'' படத்தால் அதிருப்தி...பிரபல நடிகையின் பேச்சால் பரபரப்பு


Reba Monica John says she was disappointed with this director
x

''கூலி'' படத்தில் நடிகர் சத்யராஜின் மகள்களில் ஒருவராக இவர் நடித்திருந்தார்.

சென்னை,

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ரெபா மோனிகா. சமீபத்தில் இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ''கூலி'' படத்தில் நடிகர் சத்யராஜின் மகள்களில் ஒருவராக நடித்திருந்தார்

இந்நிலையில் கூலி படத்தால் அதிருப்தி அடைந்ததாக இவர் கூறி இருப்பது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் ஒருவர், கூலி படம் பார்த்தபோது நீங்கள் என் தோழி என்று என் பெற்றோரிடம் பெருமையான சொன்னேன் என்றார். அதற்கு ரெபா மோனிகா ஜான் கூறுகையில்,

''என்ன சொல்வது. நான் அப்செட் ஆனேன், அதிருப்தி அடைந்தேன். நான் கூலியில் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை. ஆனால் அது என் கையில் இல்லை. சில விஷயங்கள் நாம் நினைத்தபடி நடக்காது.

ஆனால், தலைவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோஷப்படுகிறேன். தலைவருடன் நடித்ததுதான் முக்கியம். கூலிக்காக என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி'' என்றார்.

1 More update

Next Story