கொரோனா தொற்றில் இருந்து மீண்டார், எஸ்.பி.பி

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிப்பால் இருந்து மீண்டுள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டார், எஸ்.பி.பி
Published on

சென்னை,

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது.

இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் மீண்டும் நலமுடன் வர வேண்டும் என்று பிரபலங்கள், அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் பல்வேறு பிராத்தனைகளில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிப்பால் இருந்து மீண்டுள்ளதாக அவரது மகனான எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. தற்போது எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com