ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை - குவியும் வாழ்த்து

ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ரெடின் தனது இணையதள பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
சென்னை,
நடனத்தின் பக்கம் இருந்த ரெடின் கிங்ஸ்லியை இயக்குநர் நெல்சன் சினிமா பக்கம் அழைத்து வந்து `கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நடிக்க வைத்தார். டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் சிம்பிளாக கோவிலில் நடந்தது. அதன் பிறகு வைத்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
சங்கீதா திருமணத்திற்கு பின் தான் நடித்து வந்த சீரியல் தொடர்களிலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் சங்கீதா மற்றும் ரெடின் தம்பதி கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பதிவிட்டனர். பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சங்கீதா பகிர்ந்து வந்தார்.
இதனை தொடர்ந்து இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி, ``உங்களின் வாழ்த்துகளுக்கும், ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. இளவரசி பிறந்திருக்கிறாள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு திரைதுறையினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.






