20 கிலோ எடை குறைத்தார்: பள்ளி மாணவன் தோற்றத்தில், ஜெயம்ரவி

பள்ளி மாணவன் தோற்றத்துக்காக நடிகர் ஜெயம்ரவி 20 கிலோ எடை குறைத்தார்.
20 கிலோ எடை குறைத்தார்: பள்ளி மாணவன் தோற்றத்தில், ஜெயம்ரவி
Published on


ஜெயம்ரவி நடித்து கடந்த வருடம் டிக் டிக் டிக், அடங்க மறு ஆகிய 2 படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இப்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கோமாளி படத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 24-வது படம். கதாநாயகியாக காஜல் அகர்வால் வருகிறார்.

இந்த படத்தில் ஜெயம் ரவி சரித்திர காலத்து ராஜா, ஆதிவாசி, ஆங்கிலேயர் காலத்து அடிமை, பள்ளிமாணவன், விஞ்ஞானி உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார். இதில் ஜெயம்ரவி பள்ளி மாணவனாக நடிக்கும் தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜெயம்ரவியின் அண்ணனும், இயக்குனருமான மோகன்ராஜா, ஜெயம் படத்துக்கு முன்னால் ரவியை பார்த்ததுபோல் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

இதுபோல் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த ஜெனிலியாவும் தோற்றத்தை பார்த்து வியந்து, உனக்கு வயதே ஆகாதா? இத்தனை வருடங்களுக்கு பிறகும் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இருந்த மாதிரி அதே இளமையான தோற்றத்தில் பார்க்கிறேன் என்று பதிவிட்டு பாராட்டியுள்ளார்.

பள்ளி மாணவன் தோற்றத்துக்காக ஜெயம் ரவி கடும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை 20 கிலோ குறைத்து இருக்கிறார்.

ஜெயம்ரவிக்கு தற்போது 39 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கோமாளி படம் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com