கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்த 'ரெஜினா' படக்குழு

'ரெஜினா' திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.
கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்த 'ரெஜினா' படக்குழு
Published on

சென்னை,

மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ரெஜினா'. இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நடிகர் பாக்ஸர் தீனா 'தீனா' கதாபாத்திரத்திலும் விவேக் பிரசன்னா எஸ்.ஐ.வினாயக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

'ரெஜினா' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com