மீண்டும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரெஜினா... 'ஆர்எக்ஸ்' புதிய போஸ்டர் வெளியீடு

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு 'ஆர்எக்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மீண்டும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரெஜினா... 'ஆர்எக்ஸ்' புதிய போஸ்டர் வெளியீடு
Published on: 

சென்னை,

இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். 'கண்ட நாள் முதல்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'மாநகரம்', 'சரவணன் இருக்க பயமேன்', 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். கதாநாயகியாக மட்டுமின்றி, வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு 'ஆர்எக்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நாசர், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உண்மையை மையமாகக் கொண்ட கதை

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

'Truth Always Demands a Voice!' (உண்மைக்கு எப்போதும் ஒரு குரல் தேவை) என்ற வாசகத்துடன் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் உண்மைக்காகக் குரல் கொடுக்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு படம் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.விரைவில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் பிற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறைவடைந்த படப்பிடிப்பு

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் முதல் தோற்ற போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

X