அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கும் ரெஜினா...!

அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் தொடங்கி உள்ளது.
அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கும் ரெஜினா...!
Published on

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் தொடங்கி உள்ளது. இதில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக நடிக்க ரெஜினா கசாண்ட்ராவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரெஜினா கண்டநாள் முதல் படம் மூலம் அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் வெற்றியால் பிரபலமானார். நிர்ணயம், ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி, சக்ரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

விடா முயற்சி படத்தில் நடிக்க முதலில் ஹூமா குரோஷியை முடிவு செய்து இருந்தனர். அவருக்கு கால்ஷீட் பிரச்சினைகள் இருப்பதால் நடிக்கவில்லை. இதையடுத்து ரெஜினாவை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் படத்தில் நடிப்பதால் ரெஜினா மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ரெஜினா சமீபத்தில் நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பேசும்போது "நடிகைகள் மது அருந்துகிறார்கள் என்பதற்காக படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள் என்று அர்த்தம் இல்லை'' என்று பேசிய கருத்து பரபரப்பானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com