

சென்னை,
"நான் எப்போதும் நஸ்ரியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். இதற்கு முன்பு எனது 3 படங்களில் நடிக்க அவரிடம் கேட்டோம். ஆனால், மூன்று முறையும் அவர் மறுத்துவிட்டார். நான்காவது முறையாக கேட்டபோதுதான் சம்மதம் தெரிவித்தார்" என்று சூர்யா தெரிவித்தார்.
ஜித்து மாதவன் இயக்கியுள்ள 'சீன்' திரைப்படம் திரில்லர் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் உருவாகியுள்ளது. இதில் சூர்யா வித்தியாசமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஸ்லென் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியா தமிழ் திரையில் தோன்றுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சூர்யா, நஸ்ரியாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை குறித்து பேசினார்.
அப்போது, "நான் எப்போதும் நஸ்ரியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். இதற்கு முன்பு எனது 3 படங்களில் நடிக்க அவரிடம் கேட்டோம். ஆனால், மூன்று முறையும் அவர் மறுத்துவிட்டார். நான்காவது முறையாக கேட்டபோதுதான் சம்மதம் தெரிவித்தார்" என்று சூர்யா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் பட வாய்ப்புகளை நஸ்ரியா நிராகரித்திருக்கலாம் என்றும், தனது விருப்பத்துக்கு ஏற்ற கதைகளைத் தேர்வு செய்வதில் அவருக்கு தெளிவும் தன்னம்பிக்கையும் இருக்கிறது. நஸ்ரியாவின் நடிப்புத் திறன் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், படப்பிடிப்புக்கு முன்பு ஒவ்வொரு காட்சியையும் அவர் தயார்படுத்திக்கொள்ளும் விதம் பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.
'சீன்' படத்தில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நஸ்ரியா சிறப்பாக நடித்துள்ளதாகவும், படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளுக்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஆச்சரியமளிப்பதாகவும் சூர்யா தெரிவித்தார்.
நஸ்ரியா கடைசியாக 2014-ம் ஆண்டு வெளியான 'திருமணம் எனும் நிக்காஹ்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 'சீன்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ளார்.
சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், இந்த வாய்ப்பு தற்போது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் நஸ்ரியா ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.