'அப்படி நடித்திருந்தால் எப்போதோ நானும் பெரிய ஸ்டாராகி இருப்பேன்' - சித்தார்த்


Rejected roles where I needed to slap women, pinch navel, says Siddharth
x

பாய்ஸ் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சித்தார்த்

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சித்தார்த் . 'ஆயுத எழுத்து' என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த இவர் நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் தயாரித்து நடித்த 'சித்தா' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'இந்தியன் 2', ராஜசேகர் இயக்கத்தில் 'மிஸ் யூ' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தற்போது இவர் டெஸ்ட், இந்தியன் 3 மற்றும் தனது 40வது படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நீங்கள் ஏன் இன்னும் பெரிய ஸ்டார் ஆகவில்லை என்ற கேள்விக்கு சித்தார்த் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

'பெண்களின் இடையை கிள்ளுவது, அவர்களை அடித்து கொடுமைப்படுத்துவது, பெண்களை கட்டுப்படுத்துவது போன்ற கதாபாத்திரங்களில் எல்லாம் நான் நடிப்பதில்லை. காரணம் நான் எப்போதுமே பெண்களிடத்தில் மரியாதையுடனும் கண்ணியத்துடன் நடந்து கொள்வேன். அதை மீறும் வகையிலான கதாபாத்திரங்களில் நான் ஒருபோதும் நடிப்பதில்லை. அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் எப்போதோ நானும் பெரிய ஸ்டார் நடிகராகி இருப்பேன்' என்றார்.

1 More update

Next Story