‘தர்மபிரபு’ படத்தில் யோகி பாபுவுக்கு அம்மாவாக ரேகா!

பாரதிராஜாவின் ‘கடலோர கவிதை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், ரேகா.
‘தர்மபிரபு’ படத்தில் யோகி பாபுவுக்கு அம்மாவாக ரேகா!
Published on

ரேகா, 1990-களில் முன்னணி கதாநாயகர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜோடியாக நடித்து, பிரபல கதாநாயகிகள் பட்டியலில் இருந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவரும் இவர், தற்போது அம்மா, அக்காள் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.

யோகி பாபு கதைநாயகனாக நடிக்கும் தர்மபிரபு படத்தில், அவருக்கு அம்மாவாக ரேகா நடித்து இருக்கிறார். எமன் மற்றும் எமலோகத்தை பின்னணியாக கொண்ட கதை இது. ராதாரவி, ரமேஷ் திலக், போஸ் வெங்கட், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், கும்கி அஸ்வின், மாஸ்டர் கணேஷ், ஜனனி அய்யர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். அழகம்பெருமாள் வில்லனாக நடித்துள்ளார். யுகபாரதி எழுதிய பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து இருக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருப்பவர், முத்து குமரன்.

யோகி பாபுவுடன் ரேகா மற்றும் படத்தில் இடம் பெறும் நடிகர்-நடிகைகள் நடித்த காட்சிகள், பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த எமலோகம் அரங்கில் படமாக்கப்பட்டது. ஏவி.எம். ஸ்டுடியோ, மற்றும் சென்னை சுற்று வட்டாரங்களில் வளர்ந்துள்ள இந்த படம், அடுத்த மாதம் (மே) திரைக்கு வர இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com