

சென்னை,
‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நானி, ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
‘டெலிவரி பாய்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றன.
இந்த நிலையில், ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.