வெற்றிமாறன் தயாரித்துள்ள 'பேட் கேர்ள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட் கேர்ள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 July 2025 8:35 PM IST (Updated: 19 July 2025 10:30 AM IST)
t-max-icont-min-icon

வெற்றிமாறனின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'.

சென்னை,

காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'.

இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் திரிவேதி மேற்கொண்டுள்ளார். இப்படம் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது.

சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. கோவாவில் நடைபெற்ற 54-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பேட் கேர்ள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற செப்டம்பர் 5ந் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

1 More update

Next Story