ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் லெஜண்ட் சரவணனின் “லீடர்”

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகிறது.
ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும்  லெஜண்ட் சரவணனின் “லீடர்”
Published on

சென்னை,

2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், இந்த படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கிறார். மேலும், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா அய்யர், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் டீசர், டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தணிக்கை வாரியம் இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், ‘லீடர்’ படம் வருகிற ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முன்கூட்டியே படம் வெளியாக உள்ளது. அதாவது, வருகிற ஏப்ரல் 3ந் தேதியே தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com