அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாலா இயக்கியுள்ள 'வணங்கான்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com