ஸ்ரீநாத் பாஸி நடித்துள்ள 'ஆசாதி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


ஸ்ரீநாத் பாஸி நடித்துள்ள ஆசாதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

ஜோஜு ஜார்ஜ் இயக்கியுள்ள 'ஆசாதி' படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

சென்னை,

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் '22 பீமேல் கோட்டயம்', 'உஸ்தாத் ஓட்டல்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'வைரஸ்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீநாத் பாசி.

இவர் தற்போது மருத்துவம் தொடர்பான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ஆசாதி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை ஜோஜு ஜார்ஜ் இயக்கியுள்ளார். இதில் விஜயகுமார், ரவீனா ரவி, டிஜி ரவி, ராஜேஷ் சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். லிட்டில் க்ரூ புரொடக்ஷன் சார்பில் பைசல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

திரில்லர் கதையில் உருவாகி உள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை சபையர் ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story