ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிக்கும் 'லவ் அண்ட் வார்' படத்தின் ரிலீஸ் அப்டேட்

இந்த படத்தை இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார்.
ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிக்கும் 'லவ் அண்ட் வார்' படத்தின் ரிலீஸ் அப்டேட்
Published on

மும்பை,

பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் கடைசியாக 'ஹீரமண்டி' என்ற வெப் சீரிசை இயக்கி இருந்தார். இதனையடுத்து பன்சாலி, 'லவ் அண்ட் வார்' என்ற படத்தை இயக்கிவருகிறார். இதில், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதற்கு முன்பு கடந்த 2007-ம் ஆண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'சாவரியா' படத்தை பன்சாலி இயக்கி இருந்தார். இதனையடுத்து சுமார் 18 வருடங்களுக்கு பிறகு பன்சாலியுடன் ரன்பீர் கபூர் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளது. உடல்நிலை சரியில்லாமல் இருந்த இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி,தற்போது குணமாகியுள்ளார். உடல் நிலை சரியான நிலையில்,மீண்டும் படப்பிடிப்பினை தொடங்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இந்த நிலையில், ‘லவ் அண்ட் வார்’ படத்தின் வெளியீட்டு தேதி படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காதல் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com