விளையாட்டில் மத அரசியல்... 'லால் சலாம்' படத்தை வெளியிட குவைத்தில் தடை

லால் சலாம்' திரைப்படம் வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ளது.
விளையாட்டில் மத அரசியல்... 'லால் சலாம்' படத்தை வெளியிட குவைத்தில் தடை
Published on

சென்னை,

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'லால் சலாம்' திரைப்படம் வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

இந்நிலையில் 'லால் சலாம்' படத்தை வெளியிட குவைத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விளையாட்டு தொடர்பான மத அரசியல் பேசப்பட்டு உள்ளதால் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com