ரெமோ, சுல்தான் பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் திருமணம்

சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த படம் ரெமோ. இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த காட்சிகள் வரவேற்பை பெற்றன. இந்த படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன்.
ரெமோ, சுல்தான் பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் திருமணம்
Published on

சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த படம் ரெமோ. இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த காட்சிகள் வரவேற்பை பெற்றன. இந்த படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன். இவர் இயக்குனர் அட்லியிடம் ராஜா ராணி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கார்த்தி-ராஷ்மிகா ஜோடியாக நடிக்கும் சுல்தான் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் இருதினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கும் ஆஷா என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்கள் திருமணம் வேலூர் அருகே உள்ள சேவூரில் நடந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com