தொடரில் இருந்து நீக்கம்: வீடியோவில் அழுத டி.வி. நடிகை

தொடரில் இருந்து நீக்கயதற்காக வீடியோவில் அழுத டி.வி. நடிகை ஜனனி.
தொடரில் இருந்து நீக்கம்: வீடியோவில் அழுத டி.வி. நடிகை
Published on

தொலைக்காட்சியில் 2017-ல் இருந்து ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் நடித்து வந்த ஜனனி திடீரென்று அந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியான ஜனனி கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் அழுதுகொண்டே கூறியிருப்பதாவது:-

செம்பருத்தி தொடரில் இனிமேல் நான் இல்லை. 3 ஆண்டுகளாக இதில் நடித்து வந்தேன். எனது கதாபாத்திரத்துக்கு எல்லோரும் ஆதரவு தந்தனர். திடீரென்று நீக்கியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. திடீரென்று இந்த முடிவை எடுத்துள்ளனர். அழக்கூடாது என்று நினைக்கிறேன். சில உள் பிரச்சினைகள் உள்ளன. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. இதே போன்று இன்னொரு தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடரில் இருந்து நீக்கியதற்காக நடிகை வீடியோவில் அழுதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com