

சென்னை,
ரஜினி, கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்ப்பில் இன்பன் உதயநிதி தயாரிக்க உள்ளார். 47 வருடங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதால் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தினை நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரஜினி - கமல் இணையும் (KHxRK) படத்தில் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் களமிறங்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. குறிப்பாக “யார் ஹீரோ?” என்று ரஜினி மற்றும் கமல், இயக்குனர் நெல்சனிடம் கேட்கும் வசனம் ரசிகர்களிடையே டிரெண்டானது.
இந்த நிலையில், இப்படத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.