பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா மரணம்... 57 வயதில் நேர்ந்த சோகம்

மும்பையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இயக்குநர் சஞ்சய் குப்தா உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா மரணம்... 57 வயதில் நேர்ந்த சோகம்
Published on: 

மும்பை,

பல ஆண்டுகளாக இந்தி திரையுலகில் தனது படைப்புகளால் கவனம் பெற்ற இயக்குநர் சஞ்சய் குப்தாவின் மறைவு ரசிகர்களையும் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல இயக்குநர்

சஞ்சய் குப்தா 1994-ம் ஆண்டு வெளியான 'ஆதிஷ்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கி பாலிவுட்டில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். குறிப்பாக, அமிதாப் பச்சன், சஞ்சய் தத், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்த 'காண்டே' திரைப்படம் அவருக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 'முசாபிர்', 'ஜிந்தா', 'ஷூட்அவுட் அட் லோகண்ட்வாலா', 'ஷூட்அவுட் அட் வாடாலா' உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும், ஹிருத்திக் ரோஷன் நடித்த 'காபில்', ஐஸ்வர்யா ராய் நடித்த 'ஜஸ்பா', 'மும்பை சாகா' உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

வீட்டில் நடந்த விபத்து

இந்த நிலையில், இயக்குநர் சஞ்சய் குப்தா கடந்த அக்டோபர் 30-ந்தேதி (நேற்று) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தனது வீட்டின் சமையலறையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட தலையில் காயம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவை இயக்குநர் அசோக் பண்டிட் சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

சஞ்சய் குப்தாவின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்தி திரையுலகில் தனது படைப்புகளால் கவனம் பெற்ற இயக்குநர் சஞ்சய் குப்தாவின் மறைவு ரசிகர்களையும் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

X