பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்

உலகப் புகழ்பெற்ற சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் (வயது 86) உடல் நலக்குறைவால் காலமானார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்
Published on: 

லாஸ் ஏஞ்சல்ஸ்,

பிரபல ஹாலிவுட் நடிகரும், ‘எக்ஸ்-மென்’ திரைப்படங்களில் பேராசிரியர் சார்லஸ் சேவியர், ‘ஸ்டார் டிரெக்’ திரைப்படங்களில் கேப்டன் ஜீன்-லூக் பிக்கார்ட் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து உலகப் புகழ்பெற்றவருமான சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் (வயது 86) காலமானார்.

எம்மி, கோல்டன் குளோப், கிராமி விருது வென்றவர்

இங்கிலாந்தைச் சேர்ந்த சர் பேட்ரிக் ஸ்டீவர்ட், நாடகங்கள் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ்பெற்றார். குறிப்பாக, ‘ஸ்டார் டிரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன்’ தொடரில் கேப்டன் ஜீன்-லூக் பிக்கார்ட் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றார்.

அதேபோல், ‘எக்ஸ்-மென்’ திரைப்படத் தொடரில் பேராசிரியர் சார்லஸ் சேவியர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவரது நடிப்புத் திறமைக்காக எம்மி, கோல்டன் குளோப், கிராமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்துள்ளன.

உடல்நலக்குறைவால் மரணம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில், அல்சைமர் மற்றும் லூயி பாடி டிமென்ஷியா பாதிப்புகளுடன் போராடி வந்த பேட்ரிக் ஸ்டீவர்ட், காலமானார். அவரது மனைவி சன்னி ஓசல் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது மறைவு ஹாலிவுட் திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையில், இவர் நடித்துள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X