

கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய திலீப்பை மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கடுமையாக விமர்சித்தார்.
இதை கண்டித்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரம்யா நம்பீசனை மலையாள பட உலகில் இருந்து ஓரம்கட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்கள். இது ரம்யா நம்பீசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.