மீண்டும் தொடங்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு

இந்தியன்-2 படப்பிடிப்பை தொடங்கும்படி கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் தொடங்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு
Published on

சென்னை,

ஷங்கர் இயக்கத்தில் 1996-ல் வெளியாகி வசூல் குவித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கியது. ஆனால் கமல்ஹாசனின் வயதான தோற்றத்தில் திருப்தி இல்லாததால் சில மாதங்கள் நிறுத்தி வைத்தனர். அதன்பிறகு பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை தொடங்கியபோது கிரேன் சரிந்து மூன்று பேர் பலியான சம்பவத்தால் படப்பிடிப்பு மீண்டும் நின்று போனது. தொடர்ந்து கொரோனா பரவலாலும் படப்பிடிப்பு முடங்கியது.

தற்போது கமல்ஹாசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயாராகி உள்ளார். சினிமா படப்பிடிப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையில் மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பை தொடங்கும்படியும் 4 மாதத்துக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்கும்படியும் கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் மற்றும் இந்தியன்-2 படப்பிடிப்புகளில் மாறி மாறி பங்கேற்பார் என்று தெரிகிறது. இந்தியன்-2 படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com