ரூ.235 கோடி வசூலித்த "ரெட்ரோ" திரைப்படம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'ரெட்ரோ' திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரூ.235 கோடி வசூலித்த "ரெட்ரோ" திரைப்படம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 1-ந் தேதி 'ரெட்ரோ' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தினை ஸ்டோன் பென்ஞ்சு மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. காதல், ஆக்சன் கதையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினருக்கு வைர மோதிரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், உலகளவில் ரூ.235 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவின் நடிப்பும் சந்தோஷ் நாராயணன் இசையும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com