"ரெட்ரோ": சூர்யாவின் சண்டை பயிற்சி வீடியோ வெளியீடு


ரெட்ரோ:  சூர்யாவின் சண்டை பயிற்சி வீடியோ வெளியீடு
x

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'ரெட்ரோ' படம் கடந்த மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியானது. ஆக்சன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் 'ரெட்ரோ' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் 'ரெட்ரோ' படத்தின் காட்சிகாக சூர்யா சண்டை பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டண்ட் காட்சியை ஜைக்கா ஸ்டண்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story