3,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் 'ரெட்ரோ'

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள 'ரெட்ரோ' படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
3,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் 'ரெட்ரோ'
Published on

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ரெட்ரோ' படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.

இப்படம் நாளை மறுநாள் (மே 1-ந் தேதி) தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில் இப்படம் உலக அளவில் சுமார் 3,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும், தமிழ் நாட்டில் மட்டும் 500 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. தற்போது கேடை விடுமுறை என்பதால் படம் நல்ல வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com