”ரெட்ட தல” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

‘ரெட்ட தல’ படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
”ரெட்ட தல” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் 'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், இப்படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், ரெட்ட தல படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று மாலை 06.30 மணியளவில் பர்ஸ்ட் சிங்கிளின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com