நடிகர் ரியாஸ் கான் மீது பாலியல் குற்றச்சாட்டு

நடிகர் ரியாஸ் கான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் ரியாஸ் கான் மீது பாலியல் குற்றச்சாட்டு
Published on

மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த அறிக்கை வெளியானதற்கு பின் பல நடிகைகள் தாங்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் இருந்து நடிகர்கள் விலகி வருகின்றனர்.

நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டினார். இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்க தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ரியாஸ் கான் தன்னை செல்போன் வழியாக தொடர்புகொண்டு, 'என் ஆசைக்கு இணங்கக்கூடிய உன் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவை' எனக் கூறியதாக நடிகை ரேவதி சம்பத் தெரிவித்துள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் பிரபல நடிகராக இருப்பவர் ரியாஸ் கான். இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது தமிழ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com