ஒருவர் ஆணா என்பதை அறிய...! திருமணத்திற்கு முன் உடலுறவு அவசியம்...! ஒரு நடிகையின் அட்வைஸ்

நடிகை ஸ்ரீ ரபாகாவின் கருத்து வைரலாகி வருகிறது. இருப்பினும் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஒருவர் ஆணா என்பதை அறிய...! திருமணத்திற்கு முன் உடலுறவு அவசியம்...! ஒரு நடிகையின் அட்வைஸ்
Published on

ஐதராபாத்,

சில பிரபலங்களுக்கு ஒரே வேலை.. ஏதாவது சர்ச்சையாக பேசுவது.. சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆகிவிடுவது. சில சமயங்களில் அவை  சர்ச்சையாகி தொல்லை கொடுக்கின்றன. எத்தனை சர்ச்சைகள் வெடித்தாலும்.. சில பிரபலங்கள் அதனை அலட்சியப்படுத்துகிறார்கள்.

இதில் முதல் இடத்தில் இருப்பவர் டைரக்டர் ராம்கோபல் வர்மா. மேலும் அவருக்கு சம்பந்தபட்டவர்களும், அவர் படத்தில் நடித்தவர்களும் அந்த லிஸ்டில் இருக்கிறார்கள். இந்த பட்டியலில் தற்போது ஸ்ரீ ரபாகாவும் இணைந்து உள்ளார்.

ஸ்ரீ ரபாகா பல தெலுங்கு படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். அதையடுத்து ராம் கோபால் வர்மா இயக்கிய நக்னத்தின் மூலம் கவர்ச்சியாக நடித்து ஸ்ரீ ரபாகா பிரபலமடைந்தார். சமீபத்தில் ஸ்ரீ ரபாகா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஜொலித்தார்.

தற்போது இவர் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. திருமணத்தைப் பற்றி ஸ்ரீ ரபாகா மிகவும் கொச்சையாகப் பேசி உள்ளார்.

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது தவறல்ல. திருமணத்திற்குப் பிறகு கணவன் ஆண் இல்லை என்று தெரிந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவோம் என்று துணிச்சலான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தோழிக்கு நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாக கூறி உள்ளார்.

என் தோழி ஒருவர் ஒரு டாக்டரை மணந்தார். முதல் இரவிலேயே தன் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்தார். இதனால் அவளது வாழ்க்கை என்ன ஆகும்.

திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டு இருந்தால் அவர் ஓரினச்சேர்க்கையாளரா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும். என் பார்வையில் ஒவ்வொரு ஆணுக்கும் செக்ஸ் இன்றியமையாதது. இல்லற சுகம் கொடுக்க முடியாதவரை திருமணம் செய்து கொண்டு வருத்தப்படுவது சரியல்ல என்று கூறி உள்ளார்.

தற்போது ஸ்ரீ ரபாகாவின் கருத்து வைரலாகி வருகிறது. இருப்பினும் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிலர் வாய்ப்புகள் இல்லை என்றால் லைம் லைட்டில் இருக்கவே இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதாக கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com