என்னால் மறக்க முடியவில்லை... பிரபல நடிகை பகிர்ந்த கசப்பான அனுபவம்

ஹீரா மண்டி தி டைமண்ட் பஜார்' என்ற வெப் தொடரில் நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார்.
Richa Chadha Recalls When She Lost A Role To A Star Kid After Multiple Auditions
image courtecy:instagram@therichachadha
Published on

மும்பை,

கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கை கதையாக தயாராகி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான படத்தில் ஷகிலா வேடத்தில் நடித்து பிரபலமானவர் ரிச்சா சத்தா. இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

'ஹீரா மண்டி தி டைமண்ட் பஜார்' என்ற வெப் தொடர் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நடித்த கதாநாயகிகளில் ரிச்சா சத்தாவும் ஒருவர். அவரது நடிப்பை சிலர் இந்தி நடிகை மாதுரி தீட்சித்தோடு ஒப்பிட்டு பாராட்டினார்கள்.

இதற்கு பதில் அளித்து ரிச்சா சத்தா கூறும்போது, "இதுபோன்ற பாராட்டுகள் எனக்கு ஒரு நன்மையும் செய்யாது. காரணம் ஏற்கனவே நான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை என்னால் மறக்க முடியவில்லை.

புதிய படத்தில் நடிக்க நடிகை தேர்வுக்கு அழைப்பார்கள். நானும் செல்வேன். நான்கு ரவுண்டுகளில் நான் செலக்ட் ஆகி இருப்பேன். கடைசியாக நடிகர், நடிகையின் மகளோ அல்லது குறிப்பிட்ட கதாநாயகனின் காதலியோ தேர்ந்தெடுக்கப்படுவார். என்னை ஒதுக்கி விடுவார்கள். இப்படி வாரிசு நடிகர், நடிகைகளுக்காக பலமுறை என்னை பலியாக்கினார்கள்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com