மீண்டும் ஜாக்கிசான் ...! 68 வயதில் மீண்டும் அட்டகாசமான ஆக்ஷன் 'ரைடு ஆன்' டிரைலர்

ஆக்ஷன் காட்சிகளால் கவர்ந்த ஜாக்கி சான் நடிக்கும் புதிய படம் 'ரைடு ஆன்'. இது நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படம்.
மீண்டும் ஜாக்கிசான் ...! 68 வயதில் மீண்டும் அட்டகாசமான ஆக்ஷன் 'ரைடு ஆன்' டிரைலர்
Published on

சென்னை 

மூத்த நடிகரும் அதிரடி நட்சத்திரமான ஜாக்கிசான் புகழ்பெற்ற தற்காப்புக் கலைஞர் புரூஸ் லீயின் மிகப்பெரிய ரசிகராவார்.

புரூஸ் லீக்கு பிறகு பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளால் கவர்ந்த ஜாக்கி சான் நடிக்கும் புதிய படம் 'ரைடு ஆன்'. இது நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படம்.

இதில் தற்போது 68 வயதாகும் ஜாக்கி சான் தனது வயதை மீறிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். 2020ல் வெளியான வான்கார்ட் படத்திற்கு பிறகு வெளிவர இருக்கும் ஜாக்கி சான் படம் இது.

சினிமாவில் இருந்து விலகிய ஒரு சண்டைபயிற்சியாளர் மற்றும் அவரது குதிரையின் கதையைச் சொல்லும் படன் ரைடு ஆன். ஏப்ரல் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜாக்கி சான்

ஆசியாவின் சூப்பர் ஸ்டாரான ஜாக்கி சான் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஜாக்கி சான் தனது 8-வது வயதில் லிட்டில் பார்ச்சூன்ஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

17-வது வயதில் புரூஸ்லியின் பிஸ்ட் ஆப் பியூரி மற்றும் எண்டர் தி டிராகன் ஆகிய படங்களில் சண்டைக்கலைஞராக பணியாற்றினார். அதன்பிறகு நடிகரானார். த பிக் பிராவ்ல் என்ற படத்தில் நடித்து முன்னணி ஹாலிவுட் நடிகராகவும் உயர்ந்தார்.

போலீஸ் ஸ்டோரி, ஹார்ட் ஆப் டிராகன், ரஷ் ஹவர் உள்பட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரையுலகில் ஆற்றிய சாதனைக்காக அவருக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com