சுப்மன் கில்லுடன் திருமணமா? விளக்கம் கொடுத்த நடிகை ரிதிமா பண்டிட்

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், நடிகை ரிதிமா பண்டிட்டை கடந்த சில நாட்களாக டேட்டிங் செய்து வருவதாகவும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவியது.
சுப்மன் கில்லுடன் திருமணமா? விளக்கம் கொடுத்த நடிகை ரிதிமா பண்டிட்
Published on

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் நட்சத்திர வீரராக களமாடி வருபவர் சுப்மன் கில். தனது அதிரடி தொடக்க ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கில் கடந்த 2019 -ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். ஐ.பி.எல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்திய கில், 12 போட்டிகளில் 426 ரன்களை எடுத்தார். அமெரிக்காவில் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் காத்திருப்பு வீரராக இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், சின்னத்திரை நடிகை ரிதிமா பண்டிட்டை கடந்த சில நாட்களாக டேட்டிங் செய்து வருவதாகவும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவியது. 

இது தொடர்பாக ரித்திமா பண்டிட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோவில், "அனைவருக்கும் காலை வணக்கம், பத்திரிகையாளர்களின் சரமாரியான போன் கால் தான் என்னை எழுப்பியது. எனக்கு நடக்க இருக்கும் திருமணம் குறித்து தான் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அது யாருடன்? அது நடக்க போவதில்லை. உங்களுடைய நாளை இனிமையாக துவங்குங்கள். அப்படி ஏதாவது நடப்பதாக இருந்தால் நான் உங்களுக்கு தெரிவிப்பேன்" என்று விளக்கம் கொடுத்தார். 

View this post on Instagram

கடந்த சில மாதங்களுக்கு முன் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஆகியோருடன் சுப்மன் கில் டேட்டிங் செய்து வருவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com