“சினிமா என்ற குதிரையில் சவாரி செய்வது எளிதல்ல”- பிரியங்கா சோப்ரா

சினிமா மேலோட்டமாக பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும், அந்த குதிரையில் பயணித்து சவாரி செல்வது எளிதல்ல என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
“சினிமா என்ற குதிரையில் சவாரி செய்வது எளிதல்ல”- பிரியங்கா சோப்ரா
Published on

'மிஸ் வேர்ல்ட் பட்டம்' வென்ற பிறகு சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் தனது திறமையை நிரூபித்து உலகளவில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்கிறார். இவர் தற்போது பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் 'வாரணாசி' என்ற படத்தில் நடித்து வருகிறர். 6 ஆண்டுக்கு பிறகு பிரியங்கா சோப்ரா நடிக்கும் நேரடி இந்திய படம் இதுவாகும். இதில் நாயகனாக மகேஷ் பாபு நடிக்கிறார்.

இந்த சூழலில் பட விழாவில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா, சினிமா என்ற குதிரையில் சவாரி செய்வது எளிதானது அல்ல என்று குறிப்பிட்டார். இது குறுத்து அவர் கூறும்போது, “சினிமா மேலோட்டமாக பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும், அந்த குதிரையில் பயணித்து சவாரி செல்வது எளிதல்ல. இங்கு உணர்ச்சி வசப்பட்டு செய்யும் காரியங்கள் நமக்கே பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். இங்கு அதிர்ஷ்டம் சிலவேளை கைகொடுக்காத போது சோதனை முயற்சிகள் செய்துதான் ஆகவேண்டும். அந்த வகையில் எனது அதிர்ஷ்டத்தை சோதிக்கவே ஹாலிவுட் சென்றேன். என் இருப்பை தக்கவைக்கலாம் என்ற நம்பிக்கை வந்தது. எனவே அங்கேயே பயணிக்கிறேன். இங்கு வெற்றி எளிது, அதை தக்க வைப்பதே விஷயம்”, என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com