"சரியோ... தவறோ... நம்மைப் பற்றி அனைவரும் பேச வேண்டும்- நடிகை பூனம் பாண்டே

திரையுலகில் நமது அடையாளம் தொடர்ந்து இருந்தால் மட்டுமே நாம் கவனிக்கப்படுவோம் என்று பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
"சரியோ... தவறோ... நம்மைப் பற்றி அனைவரும் பேச வேண்டும்- நடிகை பூனம் பாண்டே
Published on

பாலிவுட் சினிமாவில் சர்ச்சை நாயகி என்று அழைக்கப்படுபவர் பூனம் பாண்டே. இவர் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றால் நிர்வாணமாக உலா வருவேன் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். பின்னர்தான் ஏப்ரல் 1-ந் தேதி அனைவரையும் முட்டாளாக்க அவர் செய்த முயற்சி இது என்பது தெரிய வந்தது. இதையடுத்து ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வந்தனர். இதற்கிடையில் தனது செயல்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் அவர் தற்போது பேசியிருக்கிறார்

"சரியோ... தவறோ... நம்மைப் பற்றி அனைவரும் பேச வேண்டும். அப்படி பேச வைக்கும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். திரையுலகில் நமது அடையாளம் தொடர்ந்து இருந்தால் மட்டுமே நாம் கவனிக்கப்படுவோம். மாறாக நம்மை பற்றி தகவல்கள் வெளியாகாத பட்சத்தில் நம்மை மறக்க நாமே காரணமாக இருந்து விடுவோம்", என்று நிகழ்ச்சி ஒன்றில் தோழிகளுடன் பூனம் பாண்டே பேசிய கருத்துக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அவருக்கான எதிர்ப்புகள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் குவிய தொடங்கி இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com