ரியோ நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் நிறுவனத்தின் “புரொடக்சன் நம்பர் 8” படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
ரியோ நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
Published on

சென்னை,

அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜோ'. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 'பிளாக் ஷீப்' கலையரசன் தங்கவேல் இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் 'ஜோ' பட ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரியோ ராஜ். அதன் பின்னர் இவர் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

 டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு சித்துகுமார் இசையமைக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

View this post on Instagram

கடந்த மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com