ரியோவின் “மேடி” படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு

கார்த்திகேயன் இயக்கும் ‘மேடி’ படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக சானியா ஐயப்பன் நடிக்கிறார்.
ரியோவின் “மேடி” படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு
Published on

கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட்' ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் ஆண்பாவம் பொல்லாதது என்ற படம் வெளியானது. கலையரசன் தங்கவேல் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மனோஜ் நாயகியாக நடித்திருந்தார். கணவன் மனைவி உறவை மையமாக வைத்து வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து "ராம் இன் லீலா" என்ற படத்தில் ரியோ ராஜ் நடித்து வருகிறார்.

நடிகர் ரியோ ராஜ் புதிய படம் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கான டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இப்படத்திற்கு ‘மேடி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு, படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர்.

இந்த நிலையில், கார்த்திகேயன் இயக்கத்தில் ரியோ ராஜ், சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மேடி’ படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com