ரியோவின் “ராம் இன் லீலா” படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

நடிகர் ரியோவின் ‘ராம் இன் லீலா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
ரியோவின் “ராம் இன் லீலா” படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
Published on

சென்னை,

கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட்' ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் ஆண்பாவம் பொல்லாதது என்ற படம் வெளியானது. கலையரசன் தங்கவேல் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மனோஜ் நாயகியாக நடித்திருந்தார். கணவன் - மனைவி உறவை மையமாக வைத்து வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் ரியோ ராஜ் ராம் இன் லீலா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்க உள்ளார். இப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். கதாநாயகியாக வர்திகா நடிக்க உள்ளார். இப்படம் காதல் கதைக்களத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியோ ராஜ் தன் பெயரை ரியோவாக மாற்றியுள்ளார்.

இந்நிலையில், ராம் இன் லீலா படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com