'காந்தாரா 2' படப்பிடிப்புக்கு எதிர்ப்பு: படக்குழு மீது போலீசில் புகார்

கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் 'காந்தாரா'
ஐதராபாத்,
ரிஷப் ஷெட்டி நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு இப்போது கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஹெரூர் வனப்பகுதியில் கடந்த 2 -ம் தேதி முதல் நடந்து வருகிறது.
இந்நிலையில், வனத்துக்குள் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாகவும், தீ வைத்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாகவும் கூறி, அங்குள்ள கிராமத்தினர் படப்பிடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுதொடர்பாக படக்குழுவுக்கும் கிராமத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் அக்கிராமத்தை சேர்ந்த ஒருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று படக்குழு மீது எசலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






