

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'காந்தாரா'. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. காந்தாரா படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலத்துக்கு முன் நடக்கும் கதையாக உருவாகும் காந்தாரா - 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பட்ஜெட் ரூ.125 கோடி என்றும் தகவல் வெளியாகியிருந்தது.
மோகன்லால் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் என்ற பேண்டஸி படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலை சந்தித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்த ரிஷப் ஷெட்டி, "லெஜண்டரி நடிகர் மோகன் லாலை சந்தித்தது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.
மலைக்கோட்டை வாலிபன் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் விமர்சகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது, பிருத்விராஜ் இயக்கத்தில் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார்.
View this post on Instagram