’24 வயதில் எடுத்த அந்த முடிவு இன்று உதவுகிறது’ - பாப் பாடகி ரீட்டா ஓரா

ரீட்டா ஓரா திரைப்பட இயக்குனர் டைகா வைட்டிட்டியை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
’24 வயதில் எடுத்த அந்த முடிவு இன்று உதவுகிறது’ - பாப் பாடகி ரீட்டா ஓரா
Published on

லண்டன்,

ஹாலிவுட் பாப் பாடகி ரீட்டா ஓரா, தன் இளமைக் காலத்தில் கரு முட்டைை உறைய வைத்ததை நினைவுகூர்ந்துள்ளார்.

தற்போது 35 வயதான ரீட்டா ஓரா, சமீபத்திய பேட்டியில், 24 மற்றும் 27 வயதில் இரு முறை முட்டை உறைபடுத்தும் சிகிச்சை மேற்கொண்டதாக கூறினார். இது அவரது மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Also Read
சாய் பல்லவியின் “ஏக் தின்” டிரெய்லர் நாளை வெளியீடு
’24 வயதில் எடுத்த அந்த முடிவு இன்று உதவுகிறது’ - பாப் பாடகி ரீட்டா ஓரா

“கரு முட்டைகளின் தரம் சிறந்த நிலையில் இருக்கும் காலத்தில் அவற்றை பாதுகாப்பது நல்லது என்று மருத்துவர் கூறினார். இப்போது நான் 30-களின் நடுப்பகுதியில் இருக்கிறேன். எனது பல நண்பர்கள் இன்னும் குடும்பம் குறித்து யோசித்து வருகின்றனர்,” என்று ரிட்டா ஓரா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் குழந்தை பெற விருப்பம் இருப்பதாகவும் ரீட்டா ஓரா கூறினார். ரீட்டா ஓரா திரைப்பட இயக்குனர் டைகா வைட்டிட்டியை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

முட்டை உறைபடுத்துதல் என்பது பெண்களின் முட்டைகளை எடுத்து, எதிர்காலத்தில் குழந்தை பெற பயன்படுத்தும் வகையில் உறைபடுத்தி பாதுகாக்கும் மருத்துவ முறையாகும். சமீப ஆண்டுகளில் இந்த நடைமுறை அதிகம் பிரபலமாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com