'கருப்பு' படத்தின் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய 'கருப்பு' படத்தில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
'கருப்பு' படத்தின் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'கருப்பு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படத்தின் அப்டேட் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, கருப்பு படத்தின் முக்கியமான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த அப்டேட் 'கருப்பு' படத்தின் டீசராக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் 'கருப்பு' படத்தின் டீசர் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ந் தேதி வெளியாகும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com