"கருப்பு" படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி


கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி
x
தினத்தந்தி 24 July 2025 7:22 PM IST (Updated: 8 Sept 2025 6:52 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தின் டீசர் வைரலாகி வருகிறது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் நேற்று 'கருப்பு' படத்தின் டீசரை வெளியிட்டிருந்தனர். இந்த டீசர் மக்களிடையே வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று திரையரங்கில் டீசரை வெளியிட்ட பிறகு பேசிய ஆர்.ஜே பாலாஜி, " எங்களால் முடிந்தவரை 'கருப்பு' படத்தை சுட சுட தீபாவளிக்குக் கொடுக்க ட்ரை பண்றோம். கடந்த ஒரு வருடமாக என்னுடைய மொத்த டீமும் இந்தப் படத்திற்காகதான் வேலை செய்துகொண்டிருக்கிறோம். ரொம்ப சந்தோஷமாக சாய் அபயங்கரின் வேலையை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இந்தப் படத்தை 5 ரைடர்ஸ் எழுதி இருக்கிறோம். சந்தோஷமாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

1 More update

Next Story