மூக்குத்தி அம்மன் 2வை இயக்காதது ஏன் ? - மனம் திறந்த ஆர்.ஜே.பாலாஜி

'மூக்குத்தி அம்மன் 2' படத்தை சுந்தர் சி இயக்குகிறார்.
சென்னை,
2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் 'மூக்குத்தி அம்மன்'. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார். இப்பாகத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. சுந்தர் சி இயக்குகிறார். சமீபத்தில், 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், 2-ம் பாகத்தை இயக்காததற்கான காரணத்தை ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், " 'எனக்கு இரண்டாம் பாகம் குறித்து எந்த ஒரு ஐடியாவும் இல்லை. என்னுடைய எண்ணங்கள் எல்லாம் வேறு கதைகளில், வேறு படங்களில் இருந்தன. இப்போது என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சுந்தர்.சியே இந்த படத்தை இயக்குகிறார்' என்றார்.






