

சென்னை,
நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னை ராமாபுரம் இல்லத்திற்கு வந்த அவர் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செய்தியாளர்களுடனான சந்திப்பை நடத்தினார். அவரிடம் ரஜினி மற்றும் கமலிடம் ஆதரவு கேட்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆதரவை கேட்கமாட்டேன் என்று கூறினார்.
என்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை என்று பின்னால் திரும்பி பார்த்து விட்டு பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து அவர், நான் அரசியல்வாதி அல்ல. மக்களின் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிடுகிறேன். ஆர்.கே. நகரில் மக்களின் தைரியத்தினை ஆதரவாக எடுத்து கொண்டு தேர்தலில் நிற்கிறேன் என்றும் கூறியுள்ளார்.