சாலை விபத்து: நடிகர் ஜீவா போலீசில் புகார்

இருசக்கர வாகன ஓட்டி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் ஜீவா போலீசில் புகார் அளித்துள்ளார்.
சாலை விபத்து: நடிகர் ஜீவா போலீசில் புகார்
Published on

கள்ளக்குறிச்சி,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவா நேற்று கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது.

இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததால், அதில் மோதாமல் இருக்க ஜீவா காரை திருப்பியுள்ளார். அப்போது கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. காரின் முன்பகுதி பயங்கரமாக சேதமடைந்தது.

இந்த நிலையில், சாலை விபத்தில் சிக்கியது தொடர்பாக நடிகர் ஜீவா சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விபத்திற்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டி மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com