"ராபர்" படத்தின் டிரெய்லர் அப்டேட்

‘மெட்ரோ’ சத்யா நாயகனாக நடிக்கும் ‘ராபர்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
"ராபர்" படத்தின் டிரெய்லர் அப்டேட்
Published on

சென்னை,

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் திரைக்கதை எழுதியுள்ளார். சென்னையில் நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே 'ராபர்'படத்தின் கதை. இப்படத்தின் கதை, திரைக்கதையை 'மெட்ரோ' , 'கோடியில் ஒருவன்' படங்களின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.

'மெட்ரோ' சத்யா நாயகனாக நடிக்கும் 'ராபர்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 'ராபர்' திரைப்படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிடுகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com