''ராபின்ஹுட்' படம் பிரமாண்டமாக இருக்கும்'- டேவிட் வார்னர்

டேவிட் வார்னர் ’ராபின்ஹுட்’ படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்து டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
ஐதராபாத்,
நிதின் மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் படம் 'ராபின்ஹுட்'. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்து டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இப்படத்தின் பிரமாண்டமான பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. டேவிட் வார்னர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய வார்னர்,
"நமஸ்காரம்" , கடந்த 15 ஆண்டுகளாக எனக்கு கொடுத்த அனைத்து அன்பு மற்றும் ஆதரவிற்காக என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை உங்கள் குடும்பத்திற்குள் வரவேற்றதை பாக்கியமாக உணர்கிறேன். நான் பார்த்ததில் இருந்து ஒன்று சொல்கிறேன், இந்தப் படம் மிகவும் அற்புதமாகவும், பிரமாண்டமாக இருக்கும்' என்றார்.
Related Tags :
Next Story






