'ராபின்ஹுட்' டிக்கெட்டு விலை உயர்த்தப்பட்டதா? - படக்குழு விளக்கம்


Robinhood ticket price hike controversy – Makers issue clarification
x

திரையரங்குகளில் 'ராபின்ஹுட்' பட டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

ஐதராபாத்,

ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் 'ராபின்ஹுட்'.நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், திரையரங்குகளில் இப்பட டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக இணையத்தில் தகவல் வெளியானது. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தநிலையில், அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட பதிவில், 'திரையரங்குகள் ராபின்ஹுட் டிக்கெட்டு விலையை உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவை அனைத்தும் முற்றிலும் தவறானவை. எங்களின் நோக்கம் சரியான விலையில் நல்ல பொழுதுபோக்கை தருவதே.

ஆந்திரப் பிரதேசத்தில் சில இடங்களில் மட்டுமே இந்த உயர்வுகள் பொருந்தும். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் மற்ற பகுதிகளின் சாதாரண விலையில் இருக்கும். உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் ராபின்ஹுட்டை அனுபவித்து மகிழுங்கள்' என்று தெரிவித்திருக்கிறது.

1 More update

Next Story